tamilnadu

img

வங்கதேச இஸ்லாமிய அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை தருவோம்..

கொல்கத்தா:

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தவர்கள் தொடர்ந்து 6 ஆண்டுகள், இந்தியாவில் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் மசோதாவை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. அதேநேரம் மிகவும் சூழ்ச்சியாக, இஸ்லாமியர்களுக்கு இது பொருந்தாது என்று அறிவித்தது.

இதற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாஜக-வுடன் இருந்த பல கட்சிகள், கூட்டணியையே முறித்துக் கொண்டன. எனினும் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குடியுரிமைச் திருத்தச் சட்ட மசோதாவை நிறைவேற்றியே தீருவோம் என்று தேர்தல் அறிக்கையில் பாஜக உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில்தான், வங்கமொழி பேசுபவர்கள் என்ற அடிப்படையில், வங்கதேச இஸ்லாமியர்களுக்கும், மேற்குவங்க மக்களுக்கும் இருக்கும் சகோதர உணர்வை, தனது தேர்தல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பாஜக தலைவர் அமித்ஷா திடீர் பல்டி ஒன்றை அடித்துள்ளார்.

“வங்கதேசத்தில் இருந்து வரும் அகதிகள் இந்து மதம், புத்த மதம், சீக்கிய மதம், ஜைன மதம், கிறிஸ்துவ மதம் என எந்த மதத்தைத் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்களுக்கு இந்திய நாட்டின் குடியுரிமை வழங்கப்படும்” என்று மேற்குவங்க பிரச்சாரத்தில் அமித்ஷா அறிவித்துள்ளார்.