tamilnadu

img

மதவெறி பாஜக - ஊழல் திரிணாமுல் கட்சிகளை வீழ்த்த சூளுரை இடது முன்னணிக்கு ஆதரவாக திரளும் இளைஞர்கள்

மதவெறிக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் இடதுசாரிகள் நடத்தும் போராட்டங்கள் புதியவாக்காளர்களைக் கவ்விப் பிடித்திருக்கின்றன. இதனை, வாக்காளர்களைச் சந்திக்கச்செல்லும் இடங்களில் எல்லாம் புதிய வாக்காளர்கள் தங்களை இடதுமுன்னணியுடன் இணைத்துக் கொள்வதிலிருந்து நன்கு காண முடிகிறது.உண்மையில், மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசின் ஊழல்களுக்கு எதிராகவும் நாட்டை ஆளும் பாஜகவின் ஊழல் மற்றும் மதவெறி நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இடதுமுன்னணி நடத்திவரும் போராட்டங்கள் புதிய வாக்காளர்களை வெகுவாகவே ஈர்த்திருக்கின்றன. ஏழு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வழக்கறிஞர் விகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா, திரிணாமுல் காங்கிரசின் சாரதா ஊழல் மற்றும் நாரதா ஊழல்களுக்கு எதிராக சட்டரீதியாக வழக்காடி வருவதுடன், ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் முன்னணியில் நிற்கும் ஓர் ஊழியராகவும் இருக்கிறார். இதனை நன்கு அறிந்துள்ள புதிய வாக்காளர்கள் விகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா வாக்கு கோரி செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு மலர்மாலை அணிவித்துதங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இவருக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இதுவரையிலும் அரசியல் அறிமுகமே இல்லாத மிமி சக்ரவர்த்தி என்ற பெண்மணியை நிறுத்தி இருக்கிறது. பாஜக கட்சியோ, திரிணாமுல் காங்கிரசிலிருந்து தங்கள் கட்சிக்குத் தாவி வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அனுபம் ஹஷ்ரா என்பவரை நிறுத்தி இருக்கிறது. இடது முன்னணி சார்பில் மக்களிடம்வாக்குகோரி செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் மதவெறி மற்றும் ஊழல் மிகுந்த பாஜக குறித்தும், ஊழலுடன் எதேச்சதிகார ஆட்சி நடத்தும் திரிணாமுல் காங்கிரஸ் குறித்தும் நன்கு அறிந்து வைத்திருப்பதை அறிய முடிகிறது. நாம்அவர்களிடம் நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சாரத்தை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைத்தான் கூறி வருகிறோம்.


தொழிலாளர் வர்க்கம் நாடு தழுவிய அளவில் நடத்திய வேலைநிறுத்தத்தின் போதும், விவசாயிகள் நடத்திய பேரணியின் போதும் எப்படியெல்லாம் திரிணாமுல் காங்கிரசும், பாஜகவும் தொழிலாளர்களுக்கு விரோதமாகவும், விவசாயிகளுக்கு விரோதமாகவும் நடந்து கொண்டன என்பதை மக்கள் நன்கு அறிந்தேவைத்திருக்கிறார்கள் என்று ஜாதவ்பூர் தொகுதிக்கு பொறுப்பேற்று இடது முன்னணியின் கன்வீனராக செயல்பட்டு வரும் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ராகுல் கோஷ் கூறுகிறார். வேட்பாளராகப் போட்டியிடும் விகாஷ்ரஞ்சன் பட்டாச்சார்யா, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். இவர் ஆயிரக்கணக்கில்திரண்டிருந்த இடது முன்னணி ஊழியர்களின் முன்னால் உரையாற்றுகையில், “நடைபெறவிருக்கும் மக்களவைத்தேர்தல், தனிநபர்களுக்கு இடையே நடைபெறும் போட்டியல்ல” என்றும், “மாறாக, நாட்டின் அரசமைப்புச்சட்டத்தைப் பாதுகாப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுநடத்தப்படும் போராட்டம்” என்றும்,“ரபேல் ஊழலில் குற்றஞ்சாட்டப் பட்டுள்ள பிரதமர் மோடியின் பிடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றும் போராட்டம்” என்றும், அத்துடன் “ஏற்கெனவேஊழல் பேர்வழி என்று மெய்ப்பிக்கப் பட்டுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் எதிரான போராட்டம்” என்று தெரிவித்தார். 24 பர்கானா தெற்கு மாவட்ட, சிபிஎம் செயலாளர் சமிக் லகிரி பேசுகையில், தங்கள் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதைக் குறிப்பிட்டார். “இம்மாவட்டத்தில் சுமார் 5,40,000 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இதில் 2,80,000 ஏக்கரில் நெல் பயிரிடப்படுகிறது. இவ்வாறு விளைந்திடும் நெல்லை விவசாயிகளிடமிருந்து இடைத்தரகர்கள் (இவர்கள் அனைவரும் தற்போது திரிணாமுல் காங்கிரசின் குண்டர்களுடன்வலம் வருபவர்கள்) குவிண்டால் ஒன்றுக்கு 1000 ரூபாயிலிருந்து 1100 ரூபாய் வரை கொடுத்து ங்கி, பின்னர் மாநில அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதாரவிலையான 1740 ரூபாய்க்கு அரசிடம் விற்று விடுகிறார்கள். இவ்வாறு இவர்கள் இம்மாவட்டத்தில் மட்டும் சுமார் 200 இலிருந்து 250 கோடி ரூபாய் கொள்ளையடித்து இருக்கிறார்கள்” என்றும் தெரிவித்தார். ஜாதவ்பூரின் பாங்கோர் சட்டமன்றத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரசைத் தவிர வேறு எவரும் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று நில முதலைகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.


டைமண்ட் ஹார்பரில் அறிவிக்கப்படாத அவசரநிலை

பக்கத்தில் உள்ள டைமண்ட் ஹார்பர் மக்களவைத் தொகுதியில் “மக்கள் மருத்துவர்” என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் டாக்டர் ஃபாட் ஹலீம் சிபிஎம் சார்பில் போட்டியிடுகிறார். இவர் சட்டமன்ற பேரவையின் முன்னாள் தலைவரான இறந்த ஹசிம் அப்துல் ஹலீம் அவர்களின் மகனாவார். முதல்வர் மம்தா பானர்ஜியின் அண்ணன் மகனும், வருங்கால இளவரசன் என்றும் முடிசூட்டப்பட்டுள்ள அபிஷேக் பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிடுகிறார். 

இத்தொகுதியில் நடைபெறும் அட்டூழியங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,இத்தொகுதி முழுவதும் துணை ராணுவப்படையினர் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறது. இத்தொகுதிக்கு இடது

முன்னணியின் கன்வீனராகவும், சிபிஎம்மாவட்டச் செயலாளராகவும் இருக்கின்ற சமிக் லகிரி, இத்தொகுதி முழுவதுமே அறிவிக்கப்படாத அவசரநிலை போல் காணப்படுகிறது என்றும், இங்கே நடைபெற்று வரும் அட்டூழியங்கள் குறித்துஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்குமுறையீடுகள் அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார். இதில் மிகவும் வேடிக்கை என்னவெனில் இங்கே திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நபரின் மனைவி கொல்கத்தா விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் 2 கிலோ தங்கத்துடன் பிடித்து வைக்கப்பட்டார். எனினும் விதான் நகர் காவல் ஆணையர் விமான நிலையத்திற்கே ஓடோடிச்சென்று, அப்பெண்மணியைக் காப்பாற்றி இருக்கிறார். இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று இடது முன்னணி தலைவர் பிமன் பாசு வலியுறுத்தி வருகிற போதிலும், மத்திய பாஜக அரசு கேளாக் காதினராக இருந்து வருகிறது.

கொல்கத்தாவிலிருந்து.. சந்தீப் சக்ரவர்த்தி