இன்று நடந்த சிங்கப்பூர் ஓபன் இறகுப்பந்து போட்டியின் அரையிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
சிங்கப்பூர் ஓபன் 2019 இறகுப்பந்து போட்டியின் அரையிறுதிப் போட்டி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. அதில் பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகூகராவை எதிர்கொண்டார். இதில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-7, 21-11 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். வெறும் 37 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் ஜப்பான் வீராங்கனை மிக எளிதில் வெற்றியை நிர்ணயிர்த்தார்.