tamilnadu

விழுப்புரம் மாவட்டத்தில் ரவுடிகளுக்கு  கடும் எச்சரிக்கை

விழுப்புரம்.ஜன.23- விழுப்புரம் மாவட்டத்தில் ரவுடிகளை ஒடுக்க கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறி வுறுத்தினார். விழுப்புரம் மாவட்ட சட்டம்-ஒழுங்கு குறித்து காவல் துறை  உயரதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்டக்  காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சரவணக்குமார் முன்னிலை  வகித்தார். டி.எஸ்.பி.க்கள், காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேசுகையில்,“ பொது அமைதியை குலைக்கும்  வகையில் செயல்படும் ரவுடிகளை கட்டுப்படுத்த வேண்டும். ரவுடிகள் பதிவேட்டை ஆய்வு செய்து, அவர்க ளது தற்போதைய செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்.  பொதுமக்களை மிரட்டி வரும் ரவுடிகள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்போரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்தினார். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும். போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு களை விரைந்து புலனாய்வு செய்து, நீதிமன்றத்தில் வழக்குத்  தொடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில், சாட்சிகளை அழைத்து வந்து, விசாரணையை விரைந்து முடித்து, எதிரிகளுக்கு தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.