விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஒன்றியத்திற்குட்பட்டது வடபாலை கிராமம். இக்கிராமத்தில் நெடுஞ்சாலை ஓரமாக சுமார் 20 குடும்பத்தை சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் கடந்த 70 ஆண்டுகளாக அங்கு உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா கேட்டு பல ஆண்டு களாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை அங்கு குடியிருக்கும் அந்த அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் அந்த 20 குடும்பத்தை சேர்ந்தவர் தாங்கள் குடியிருக்கும் அரசு புறம்போக்கு இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையிடம் கோரிக்கை மனு அளித்தனர்.