விருதுநகர், ஜூன் 29- விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டது சுக்கில நத்தம் ஊராட்சி. இங்கு 70-க்கும் மேற்பட்ட ஆதி திராவிடர் குடும்பத்தினர் வசித்துவரு கின்றனர். இவர்களுக்கு கடந்த 1988-ஆம் ஆண்டு அன்னை இந்திரா காலனியில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் வழங்கப்பட்டது. 70 குடும்பத்தினர் வீடு கட்டி குடியிருநது வரு கின்றனர். இந்த நிலையில், அனைவருக்கும் தனித் தனியே பட்டா வழங்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். தாங்கள் வசிக்கும் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும் எனவும் கோரி க்கை விடுத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் காமாட்சிநாதன், முத்தையா, வழிவிட்ட ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.