tamilnadu

img

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து - ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அப்பைய நாயக்கன்பட்டி பகுதியில் சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா என தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இச்சம்பவத்தில் உரிமையாளர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டது, உரிய பாதுகாப்பின்றி பணியில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.