tamilnadu

மலைவாழ் மக்களுக்கு நிவாரண உதவிகள்

திருவில்லிபுத்தூர், மே 20- விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனை த்து நீதிமன்றங்களிலும் பணியாற்றும் நீதி பதிகள் கொடுத்த உதவித்தொகை ரூபாய் 62 ஆயிரத்தை கொண்டு தாணிப்பாறை, பிளவக்கல் பகுதியிலுள்ள மலைவாழ் மக்களுக்கு அரிசி பலசரக்கு உள்ளிட்ட நிவாரண பொருட்களை சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் மாவட்ட முதன்மைநீதிபதியுமான முத்து சாரதா வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை செயலாளர் நீதிபதி மாரியப்பன் செய்திருந்தார இந்நிகழ்வில் மாவட்ட வரு வாய் துறையினர் மற்றும் தன்னார்வ லர்கள் கலந்து கொண்டனர்.