districts

img

பிச்சாவரம் சுற்றுலா மைய படகு ஓட்டும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள்

சிதம்பரம், ஜூன் 2- சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா  மையம் உள்ளது. கொரோனா தொற்று  பரவலை தடுக்கும் விதமாக பிச்சாவரம் சுற்றுலா மையம் கடந்த இரண்டு மாதங்க ளாக மூடப்பட்டுள்ளது. சுற்றுலா மையத்தில் படகு ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளராக பணியாற்றி வந்த 50க்கும் மேற்பட்ட குடும்பம்பங்கள் வருமானமின்றி மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றி யச் செயலாளர் ரமேஷ்பாபு ராபிட் ரெஸ்  பான்ஸ் என்ற அமைப்பின் மூலம் அவர்க ளுக்கு நிவாரண உதவிக்கு  ஏற்பாடு செய்தார்.  இதையடுத்து பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் தனிமனித இடைவெளியுடன் சுற்றுலா மைய தொழிலாளர்கள் மற்றும் படகு  ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் சிதம்பரம் சார் ஆட்சியர் மது பாலன் கலந்து கொண்டு  நிவாரண உதவி களை வழங்கினார்.  இதில் மாவட்டக் குழு  உறுப்பினர் கற்பனைச் செல்வம், கிள்ளை அரசு மருத்துவர், சுற்றுலாத்துறை நிர்வாகி கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.  அதேபோல் பி.முட்லூரில் மாற்றுத்திற னாளிகளுக்கு நிவாரண உதவிகள் வழங் கப்பட்டது. இதிலும் சிதம்பரம் சார் ஆட்சி யர் கலந்துகொண்டு  நிவாரண உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பி.முட்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயசீலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு ஆகி யோர் கலந்து கொண்டனர்.