tamilnadu

ஜனநாயக இயக்கங்களுக்கு அனுமதி கோரி சிபிஎம் மனு

விழுப்புரம். செப். 29- விழுப்புரம் மாவட்ட த்தில் சட்டமன்ற இடைத் தேர்தலை ஒட்டி மாவட்டம் முழுவதும்  அமலாக்கப்ப ட்டுள்ள தேர்தல் நடத்தை விதி முறைகளை தளர்த்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வலியுறுத்தியுள்ளார். அம்மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது:- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி மாவட்டம் முழுவதும் வரும் 27.10.2019 வரை தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் சார்பில் நடைபெறும் அரங்கக் கூட்டங்கள், கொடி யேற்றும் நிகழ்ச்சி, தியாகிக ளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்சிகள், மிக முக்கிய மான மக்கள் பிரச்சனை களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் இயக்க ங்கள், பொதுக்கூட்டங்கள் ஆகிய ஜனநாயக நடவடிக்கைகளுக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்படுகிறது. இது குறித்து உரிய வகையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இதுகுறித்து தாங்கள் உரிய வகையில் தொடர்புடைய துறைகளுக்கு தகுந்த வழிகாட்டுதல் வழங்கிட வேண்டுமென கேட்டு க்கொள்கிறோம்.  மேலும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தவிர மாவட்டத்தில் இதர 10 சட்டமன்ற தொகுதிகளிலும் மேற்கண்ட ஜனநாயக இயக்கங்களுக்கு அனுமதி அளிக்கவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.  இவ்வாறு அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் இம்மனுவின் நகல் அளிக்கப்பட்டுள்ளது.