tamilnadu

பொள்ளாச்சியில் போதை பொருட்கள் பறிமுதல்

பொள்ளாச்சி, ஜூன் 28- பொள்ளாச்சி அருகே ரூ.7.15 லட்சம் மதிப் புள்ள குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட  போதை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சனியன்று கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் நியமன அலுவலர் கு.தமிழ்ச் செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் அடங் கிய குழு பொள்ளாச்சியில் சோதனையில் ஈடு பட்டனர்.  இந்நிலையில், சூளேஸ்வரன்பட்டி பழனியப்பன் நகரில் உள்ள காஜா ஷெரீப் என்பவருக்கு சொந்தமான குடோனில் சோதனையின் போது 600 மூட்டைகளில் ரூ.7.15 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டி ருந்தது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் உணவு மாதிரி எடுத்து  பகுப்பாய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர்.  மேலும், இது போன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, போதை பொருட் களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இதுபோன்ற குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவோர்கள் விபரம் தெரிந்தால் உணவு பாதுகாப்பு துறை  வாட்ஸ் ஆப் எண்ணான 94440 42322 என்ற எண்ணிற்கு அனுப்பலாம் எனவும் உணவு பாது காப்பு துறையினர் தெரிவித்தனர்.