districts

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

விழுப்புரம், ஜூன் 20- செஞ்சி அருகே காவல் துறையினர் நடத்திய வாகன  சோதனையில் லாரியில் கடத்திய ரூ.5 லட்சம் மதிப்பி லான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வளத்தி  காவல் நிலைய சரகத்துக்குட்  பட்ட ஞானோதயம் பகுதி யில் சோதனை சாவடி உள்ளது. இங்கு ஞாயிற்றுக் கிழமை அதிகாலை உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது அந்த வழி யாக வந்த லாரியை மடக்கி  காவல் துறையினர் சோதனை  செய்தனர். சோதனையில் 33 மூட்டைகளில் பான்பராக், 9 மூட்டைகளில் ஹான்ஸ் ஆகியவை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அப்போது லாரி ஓட்டுநர் தப்பி ஓட  முயன்றார். காவல் துறையி னர் அவரை விரட்டிச் சென்று பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லாரி டிரைவர் கிருஷ்ணகிரி மாவட்  டம் ஆனைகிரி அருகே உள்ள சின்னார் கிராமத்தை சேர்ந்த சதீஷ் (22) என்பது தெரிய வந்தது. மேலும் பெங்களூரு பகுதியில் இருந்து புதுவைக்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களான ஹான்ஸ், குட்கா ஆகியவை கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து காவல் துறையினர் ஓட்டுநரையும், லாரியையும் வளத்தி காவல்  நிலையத்தில் ஒப்படைத்த னர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு 5 லட்ச ரூபாய் இருக் கும் என்று கூறப்படுகிறது.