விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3ஆம் கட்ட அகழாய்வில் தோண்டப்பட்ட 16 குழிகளில், உடைந்த நிலையிலான சுடுமண் உருவ பொம்மை, கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், வட்டச் சில்லு, தங்கமணிகள் என இதுவரை 3000க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், புதிதாகத் தோண்டப்பட்ட குழியில் பழங்காலத்தில் சுடுமண்ணால் ஆன மணிகள், சங்கு வளையல்கள் கண்டறியப்பட்டன.
முன்னோா்கள் தொழில்கள் நடந்ததற்குச் சான்றாக பல்வேறு அலங்காரங்களில் சங்கு வளையல்களும் கிடைத்துள்ள நிலையில், தற்போது சுடுமண்ணால் ஆன மணிகள், சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது என தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்