விழுப்புரம், மே 24- விழுப்புரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 300க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வேலை செய் கின்றனர். மேலாளர் சேகர் சனிக்கிழமை தூய்மைப் பணியை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது நகராட்சி தூய்மைப் பணி ஆய்வாளர் தின்னையாமூர்த்தி என்பவர் சேகரை தகாத வார்த்தையால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சேகருக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிக மாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை கண்டித்தும், தூய்மைப் பணி ஆய்வாளர் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணியை புறக் கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, நகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஆணையர் தட்சி ணாமூர்த்தி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களிடம், புகார் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்ப தாகக் கூறினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.