tamilnadu

img

முகக்கவசம் கேட்டு தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூன் 16- கொரோனா தடுப்பு பணி யில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு முகக்  கவசம், கையுறை உள்ளிட்ட  பாதுகாப்பு உபகரணங் களை வழங்க வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூன் 16)  அம்பத்தூர் மண்டல அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் (சிஐடியு) சார்பில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் தொழிலாளர்கள் கோரிக்கை களை வலியுறுத்தி முழக்க மிட்டனர். அப்போது செய்தி யாளர்களிடம் சங்கத்  தின் தலைவர் எஸ்.கே. மகேந்திரன் கூறியதாவது: தூய்மைப் பணியாளர்க ளுக்கு தினசரி முகக்கவசம், கையுறை, சோப்பு உள்ளிட்ட  பாதுகாப்பு உபகரணங் களை வழங்க வேண்டும்.

தனிமனித இடைவெளியுடன் போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். அரசு  அறிவித்தபடி இரட்டிப்பு ஊதியத்தை 2 மாதமாகியும் வழங்காமல் உள்ளதை உட னடியாக வழங்க வேண்டும். மேலும், சிறப்பு ஊதியமாக 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்  கப்படும் என முதல்வர் அறி வித்து 15 நாட்களாகியும் வழங்கப்படாமல் உள்ளதை வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு அரசாணைப்படி 16 ஆயி ரத்து 725 ரூபாய் ஊதியம்  வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவ டிக்கையில் உயிரிழந்தால், நிரந்தர, தற்காலிக ஊழி யர்கள் என பாகுபாடு பார்க்கா மல் 50 லட்சம் ரூபாய் இழப்பீ டும், குடும்பத்தில் ஒருவ ருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.  இந்த  கோரிக்கைகளை வலியு றுத்தி நாளை (ஜூன் 18) ரிப்பன் மாளிகையில் அர சின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொதுச்செய லாளர் பி.சீனிவாசலு, நிர்வாகிகள் மணிமேகலை, கே.தேவராஜ், டி.ராஜன், ஆர்.குப்புசாமி, ஜி.மூர்த்தி, பாபு, ஆனந்தராவ், ரோசய்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.