பென்னாகரம், பிப். 3- பென்னாகரத்தை அடுத்துள்ள சின்ன பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெண்கள் பாது காப்பு குறித்து விழிப்புணர்வு கருத் தரங்கம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள சின்ன பள்ளத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழா விற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலை வர் வி. மாதன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் பழனிம் மாள் முன்னிலை வகித்து வரவேற்பு ரையாற்றினார். இதில், பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மேகலா பெண் குழந்தைகளின் பாதுகாப்பு சம் பந்தமாக பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவிகளிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் விதமாக பேசினார். பெண் குழந்தைகளை உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களின் பாதுகாப் பில் விட்டுச் செல்வதால் ஏற்படுகின்ற பல்வேறு விதமான சம்பவங்களை குறிப்பிட்டு காட்டினார். அத்துடன் கல்வியின் இன்றியமையாமையை அனைவரும் உணர்ந்து அனைத்து குழந்தைகளும் தரமான கல்வி பெறு வதற்கு பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண் டார். அதேபோல் காவலன் செயலியின் சிறப்புகளையும், அதனால் ஏற்படு கின்ற நன்மைகளைப் பற்றியும் அனை வரும் அறிந்து கொண்டு அந்த செய லியை ஒவ்வொருவரும் தங்கள் கைப் பேசியில் பதிவிறக்கம் செய்து பயன்ப டுத்தினால் பெண்களுக்கு எதிராக ஏற்படுகின்ற பல்வேறு குற்றங்கள் தடுக்கப்படும் என்பதையும் விளக்கி னார். இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவி கள், இளைஞர்கள் என பெரும் திரளாக கலந்து கொண்டனர்.