tamilnadu

img

அடையாள அட்டை வழங்குவதில் முறைகேடு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

விழுப்புரம், பிப்.19- விழுப்புரம் மாவட்டம், முண்டியம் பாக்கத்தில் அமைந்துள்ளது அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை. மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அடை யாள அட்டை கோரி விண்ணப்பம் செய்வோருக்கு மாவட்ட அரசு மருத்துவமனையில் மாற்றுத்திற னாளிகளுக்கான பரிசோதனை அடிப்படையில் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடையாள அட்டை பெற மாவட்டம் முழுவதிலும் இருந்து மருத்துவமனைக்கு வரும்  தகுதியான மாற்றுத்திறனாளிகளை ‘நீ நன்றாக இருக்கிறாய், உனக்கு அடையாள அட்டை வழங்க முடியாது’ எனக் கூறி தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை அலைக்  கழித்து வருகின்றனர் மருத்து வர்கள்.  மேலும் மருத்துவமனையில் பணி யாற்றும் சிலர் இடைத்தரகர்களாக இருந்து கொண்டு, லஞ்சம் பெற்றுக் கொண்டு தகுதியில்லாத நபர்களுக்கு மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டையை வழங்கி வருகின்றனர்.  அடையாள அட்டை வழங்குவ தில் பாகுபாடு காட்டக் கூடாது, மாதம் ஒரு முறை மாற்றுத்திறனாளி கள் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும், மருத்துவமனை யில் சோதனை செய்வதற்கான  டோக்கனை காலை 8 மணி முதல் வழங்க வேண்டும், மருத்துவ மனையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி செவ்வாயன்று (பிப்.18) தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாற்றுத்திற னாளிகள் மருத்துவமனையை முற்றகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மருத்துவ மனைக்கு ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட  ஆட்சியர் ஆ.அண்ணா துரையிடம் நேரில் அழைத்துச் சென்றனர்.  மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உடன டியாக கோரிக்கைகள் மீது நட வடிக்கை எடுப்பதாக தெரி வித்தார். இதனையடுத்து மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.