விழுப்புரம்:
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே ரூ.70 கோடியே 59 லட்சம் மதிப்பில் அரசு சட்டக் கல்லூரி, சாலாமேட்டில் ரூ.7 கோடியே 98 லட்சம் மதிப்பில் அரசு சட்டக் கல்லூரி டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றின் திறப்பு விழா மற்றும் விழுப்புரம் நகராட்சி நூற் றாண்டு விழாவையொட்டி புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா சட்டக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், துரைக்கண்ணு, சட்டத்துறை அரசு செயலாளர் கோபி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வரவேற்றார்.விழாவில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்டிமுடிக்கப்பட்ட அரசு சட்டக்கல்லூரி, மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கட்டிடங்களை திறந்து வைத்தார். நகராட்சி நூற்றாண்டு விழா திட்டப்பணிகளான விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள குளத்தை ரூ.1 கோடி மதிப்பில் தூர்வாரி சுற்றிலும் நடைபயிற்சி பாதையுடன் பூங்கா அமைக்கும் பணிக்கும், ரூ.4 கோடி மதிப்பில் நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கும், மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் மொத் தம் ரூ.279 கோடியே 31 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலான 594 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மாவட்டத்தில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட ரூ.92 கோடியே 6 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான 29 புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். தொடர்ந்து, அனைத்து துறைகளின் சார்பில் 1,636 பேருக்கு ரூ.17 கோடியே 22 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.விழாவில் எம்.எல்.ஏ.க் கள் குமரகுரு, பிரபு, சக்கரபாணி, முத்தமிழ்ச் செல்வன், சட்டக்கல்வி இயக்குனர் சந்தோஷ்குமார், மாநில சர்க்கரை ஆலை இணைய தலைவர் ராஜசேகர், விழுப்புரம் அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் ரமா, நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.முடிவில் அரசு சட்டக்கல்லூரி முதல்வர் கயல்விழி நன்றி கூறினார்.