tamilnadu

வேதாரண்யம் : முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே நூறு நாள் வேலை திட்டத்தில் வாய்க்கால் தூர் வாரிய போது முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள செட்டிப்புலம் கிராமத்தில் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் புதன்கிழமையன்று தூர் வாரும் பணி நடை பெற்றது. அப்போது முதுமக்கள் தாழி கண்டெடுக்கப் பட்டது. அதனுள் எலும்புத் துண்டுகள் மற்றும் உலோகப் பொருள்கள் இருந்தன. தகவல் அறிந்துஅங்கு சென்ற வேதார ண்யம் வட்டாட்சியர் சண்முகம் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் நேரில்விசாரணை மேற்கொண்டுள் ளனர்.