tamilnadu

img

சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி வெளிமாநிலத் தொழிலாளர்கள் போராட்டம்

நெல்லை,மே 9- கூடங்குளம் அணுமின் நிலை யத்தில் பணிபுரியும் வடமாநிலத் தொழி லாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி போராட்டத்தில் ஈடு பட்டனர்.  நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 10 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

கொரோனா பரவல் தடுப்பு ஊர டங்கு உத்தரவால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்  அணுமின் நிலைய வளாகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்தில் இருப்ப வர்கள் வருடாந்திர பராமரிப்புப் பணி யின்போது கதிரியக்கத் தன்மை கொண்ட செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் மாற்றப்படும்போது தங்க ளது உடலுக்கு ஏதேனும் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்ச மும் தங்க வைக்கப்பட்டிருந்த இடத் தில் போதுமான அளவு தண்ணீர், குடி தண்ணீர், கழிப்பிட வசதிகள் இல்லாததால்  சொந்த மாநிலங்க ளுக்கு அனுப்பி வைக்கும்படி ஒப் பந்த நிறுவனங்களிடம் கோரிக்கை வைத்தனர்.

ஒப்பந்த நிறுவனங்கள் இது குறித்து  முடிவு எடுக்காததால் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட வடமாநில ஒப்பந்தத் தொழிலாளர்கள் அணுமின் நிலைய வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.