tamilnadu

img

வேடசந்தூர் அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு

வேடசந்தூர்
திண்டுக்கல் மாவட்டத்தின் வடக்கு பகுதி நகரான வேடசந்தூர் பேருந்து நிலையத்திலிருந்து வெள்ளியன்று அதிகாலை திண்டுக்கலுக்கு அரசு நகர பேருந்து புறப்பட்டது. வேடசந்தூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் உள்ள லட்சுமணம்பட்டி நால்ரோடு நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிக் கொண்டிருந்தபோது, நான்கு பேர் கொண்ட கும்பல் கர்ச்சிப் கொண்டு முகத்தை மறைத்து பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியை கட்டையால் அடித்து நொறுக்கிவிட்டு தப்பியோடியது. ஓட்டுநர் பழனிச்சாமி, நடத்துநர் சக்திவேல் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் வேடசந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.