tamilnadu

img

அறிவிப்புகளுக்கு மாறாக  மருத்துவமனைகள் விழுப்புரம் ஆட்சியருக்கு சிபிஎம் கடிதம்

விழுப்புரம் மாவட்டத்தில் கோரோனா தொற்றுநோய் பரவாமல் தடுக்க சமூக விலகலைக் கடைப்பிடிப்ப தோடு மக்களின் அடிப்ப டைத் தேவைகளையும், சுகாதாரத் துறையின் தேவைகளையும் அரசு உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியம் எழுதியிருக்கும் கடிதத்தின் விவரம் வருமாறு:-
கோரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்க மத்திய - மாநில அரசுகள் எடுத்திருக் கும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. வெளி மாநிலங்கள் - மாவட்டங்களிலிருந்து விழுப்புரம்  மாவட்டத்துக்கு வந்தவர்களை முழுமையா கக் கண்டறிந்து தனிமைப் படுத்தும் பணியை முடக்கி விட வேண்டும்.

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்,  மருத்துவத் துறை ஊழியர்கள், வருவாய்த்துறையினர், மின் வாரிய ஊழியர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், அங்கன் வாடி ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து  ஊழியர்களுக் கும் முகக் கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள், மருந்து தெளிப்பான்கள், சாணிடை சர்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் இதுவரைக்கும் என்பது வருத்தத்துக்குரிய தாகும்.

மாவட்ட - வட்ட தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், நகராட்சி சுகாதார மையம் ஆகியவற்றில் பணியாற் றும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப் புற தூய்மைப் பணியாளர்க ளுக்கு முகக்கவசம், கையுறைகள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.இந்த தட்டுப்பாட்டை உடனடியாகப் போக்க வேண்டும்.

இம்மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முண்டியம்பாக்கத் திலுள்ள விழுப்புரம் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை படுக்கை வசதியுடன் தயார் நிலையில் உள்ளது. ஆனால், மாவட்டத் தலைமை மருத்துவமனை உட்பட வட்டார மருத்துவமனைக ளில் மருத்துவர், செவிலியர், பணியாளர்கள்,  நோயாளிகள், உடனிருப் போருக்குத் தேவையான முகக்கவசங்கள், கையுறைகள், மருத்துவ உபகரணங்கள் இருப்பு இன்னும் என்ற நிலையில் தான் இயங்கி வருகின்றன.

மேலும், மாவட்டத்தில் நோய்த் தொற்றை உறுதி செய்வதற்கான பரிசோத னைக் கருவிகள், மருந்து மாத்திரை, வெண்டிலேட்டர் கள் தேவையான அளவு இல்லை என்று மருத்துவ மனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளபடியே இது முதலமைச்சர் சுகாதாரத் துறை செயலாளர், அமைச்சரின் அறிவிப்புக ளுக்கு மாறாக இருப்பது பேரதிர்ச்சியாகும். 

எனவே, மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் போர்க்கால அடிப்படையில் பட்டு மருத்துவமனைகளுக் குத் தேவையான வெண்டி லேட்டர் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் கொள் முதல் செய்து ஓரிரு நாட்களில் வழங்க வேண்டும்.இவ்வாறு சுப்பிரமணி தெரிவித்திருக்கிறார்.