tamilnadu

img

வெனிசுலாவை சிரியாவாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் - ரஷ்யா

வெனிசுலா மற்றுமொரு சிரியா போல் மாற ராஷ்யா அனுமதிக்காது என ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


கடந்த ஜனவரி மாதம் வெனிசுலா நாட்டின் குடியரசுத் தலைவரான நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு சதிகளை அரங்கேற்றி வருகிறது. அமெரிக்காவின் திட்டப்படி வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் குஎய்டோவை இடைக்கால குடியரசுத் தலைவராக அறிவித்துக் கொண்டனர்.இதன்மூலம் வெனிசுலாவில் வன்முறையை உருவாக்க அமெரிக்கா முயன்று வருகிறது. மேலும் வெனிசுலா உணவு மற்றும் மருந்து பொருள்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இதனை மனிதாபிமான தலையீடு என அமெரிக்கா நியாயப்படுத்தி வருகிறது. சோசலிச கொள்கையை உயர்த்தி பிடிக்கும் மதுரோவை பதவியிலிருந்து நீக்கி தனது கைப்பாவை ஆட்சியை நிலை நிறுத்த பல்வேறு பித்தலாட்டங்களை அமெரிக்கா தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. இந்நிலையில் வெனிசுலாவின் நிலைமை பாதுகாக்க ராணுவ படைகளும் பயன்படுத்தப்படும் என அமெரிக்கா ஒரு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்யா, வெனிசுலா மீது அமெரிக்கா ஏதாவது ராணுவதலையீடு செய்தால், அதனை தென்அமெரிக்கா நாடுகளுடன் இணைந்து ரஷ்யா எதிர்கொள்ளும். ஒரு போதும் வெனிசுலாவை சிரியாவாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்று ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் லவ்ரவ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.