tamilnadu

img

2018, 2019 ஆண்டுகளுக்கான இலக்கியத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில், 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளுக்கான இலக்கியத் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. 

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டின் இலக்கிய  மன்றமான ஸ்வீடன் அகாடமி தேர்ந்தெடுத்து வருகிறது. இந்நிலையில், ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில், 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளுக்கான இலக்கியத் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.  இதில் 2018-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு, போலந்து நாட்டை சேர்ந்த ஒல்கா டோகார்சுக் என்ற பெண் எழுத்தாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல், 2019-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு ஆஸ்திரியாவை சேர்ந்த எழுத்தாளர் பீட்டர் ஹேண்ட்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.