tamilnadu

img

ஹோ சி மின் : ‘பெற்றோரைப் போற்றுங்கள்’

“இன்று வெட்டுக்கிளிகள் யானையுடன் சண்டைபோடுகிறது. ஆனால் நாளை யானையின் குடல் பிடுங்கியெறியப்படும்’’ என்று சொன்னது உற்சாகப்படுத்த மட்டுமல்ல,.. உண்மையில் நடந்தேறியது.அமெரிக்க வல்லரசினை மண்ணைக் கவ்வச் செய்தவர் வியட்நாம் விடுதலை இயக்கத்தின் மகத்தான தலைவர் தோழர் ஹோசிமின்.  1930ல் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியது முதல் தனதுஇறுதி நாள் வரை மார்க்சிய லெனினியப் பாதையில் உறுதியாக நின்றுஅதுதான் அத்தனை செயல்களுக்கும் அடிப்படையான தத்துவம்,வளரும் சமூக விஞ்ஞானம், பிரச்சனைகளின் தீர்வு அதில் தான் உள்ளதுஎன்பதை உரக்கச் சொல்லி அதன்அடிப்படையில் புரட்சியின் பாதை என்றபுத்தகத்தை வியட்நாமின் புரட்சிக்கான கட்டமைப்பு குறித்து எழுதினார். அது தான் இன்று வரை வியட்நாம் கம்யூனிஸ்ட்களின் அடிப்படையான நூலாகப் போற்றப்படுகிறது.உண்மையாய் இருத்தல், போற்றுதல் என்ற இரண்டு நல்லொழுக்கங்களில் ஹோசிமின் உறுதியாக இருந்தார். அடுத்தடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றார்.  வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி இந்த கோட்பாடுகளைத்தாங்கி நிற்கிறது. நாட்டுக்கும், மக்களுக்கும் உண்மையுடனும் நடந்து கொள்வது முதல் கடமை. ஒவ்வொருவருக்கும் பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் உண்டு. அவர்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டும், உயர்வாக மதிக்கவேண்டும், ஏனெனில் உங்களுக்கு வாழ்வு அமைத்துக் கொடுத்தவர்கள் அவர்கள். இது இரண்டாவது கடமை.இந்த கோட்பாட்டை வியட்நாமியர்கள் உறுதியாகப் பின்பற்றி நிற்கின்றனர்.  அதனால் தான்வெட்டுக்கிளிகளால் யானையின் குடலைப் பிடுங்கி எறிய முடியும் என்று நம்பிக்கையோடு யுத்தகாலத்திற்குமட்டுமல்ல; எதிர்காலத்திற்கும் சேர்த்து சொன்னார் ஹோசிமின். 

இன்று தோழர் ஹோ சி மின் நினைவு நாள்.....

===பெரணமல்லூர் சேகரன்===