வாஷிங்டன்
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துதல் மற்றும் ஊரடங்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்காவில் ஜூன் 10-ஆம் தேதி ஜி-7 உறுப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாநாட்டிற்காக அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் காணொலி மூலம் உறுப்பு நாடுகளின் பிரதமர்களுக்குச் சிறப்பு அழைப்பு விடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் செய்தி வெளியிடப்பட்டது. மேலும் ஆஸ்திரேலியா, ரஷ்யா, தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்ப்டுள்ளதாக டிரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று ஜெர்மன் பிரதமர் கொரோனாவை காரணம் காட்டி மாநாட்டில் நேரடியாகப் பங்கேற்க இயலாது அறிவித்திருந்த நிலையில், ஜி 7 உச்சி மாநாட்டைச் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளார்.