tamilnadu

img

உதவியாளர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு...  சிக்கலில் டிரம்ப் குடும்பம்....

வாஷிங்டன்
உலகின் வல்லரசு நாடாகக் கருதப்படும் அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவமாடி வருகிறது. தினமும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்வதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுவரை அமெரிக்காவில் 13 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 78 ஆயிரத்து 816 பேர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்து 23 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 

இந்நிலையில், கொரோனாவால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குடும்பத்திற்கு மீண்டும் சிக்கலை உருவாகியுள்ளது. நேற்று டொனால்டு டிரம்ப்பின் தனிப்பட்ட உதவியாளரான வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலக ஊழியர் வேலட் என்பவருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ளது. இந்த அதிர்ச்சியிலிருந்து டிரம்ப் குடும்பம் மீள்வதற்குள் இன்று டிரம்ப் மகளான இவான்கா டிரம்பின் தனிப்பட்ட உதவியாளர் கேடி-க்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில்,  டிரம்ப் குடும்பம் அதிர்ச்சியடைந்துள்ளது.

ஏற்கெனவே வெள்ளை மாளிகை வளாகத்தில் பணிபுரியும் அமெரிக்க ராணுவத்தின் உறுப்பினர் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியும், துணை ஜனாதிபதி ஆகியோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.