tamilnadu

img

வேட்டி, சேலையில் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தம்பதி

ஸ்டாக்ஹோம் (சுவீடன்)
 உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசின் 2019-ஆம் ஆண்டிற்கான பொருளாதார பிரிவை அபிஜித் பானர்ஜி (இந்திய வம்சாவளி), எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகியோருக்கு கூட்டாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. சர்வதேச அளவில் வறுமையை ஒழிக்கும் திட்டங்களை வகுத்ததற்காக இந்த கவுரவம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நோபல் பரிசு வழங்கும் விழா ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அபிஜித் பானர்ஜி இந்திய முறைப்படி வேட்டி அணிந்தும், அவரது மனைவி எஸ்தர் டஃப்லோ சேலை அணிந்தும் நோபல் பரிசை பெற்றுக் கொண்டனர்.நமது நாட்டின் பாரம்பரியத்தை நோபல் அரங்கின் மேடையில் ஏற்றிய அபிஜித் பானர்ஜி மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் பிறந்தவர். தற்போது அமெரிக்காவில் குடியேறி அந்நாட்டின் குடியுரிமையுடன் அங்கு வாழ்ந்து வருகிறார்.
மேலும் மிகவும் குறைந்த வயதில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை அறிவிக்கப்பட்டவர் என்ற பெருமையை அபிஜித் பானர்ஜியின் மனைவி எஸ்தர் டஃப்லோ (46 - வெளிநாட்டைச் சேர்ந்தவர்) பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.