வேலூர், மே 3-கல்வி, ஆராய்ச்சிப் பணிகள், மாணவர்கள், பேராசிரியர்கள் பரிவர்த்தனைக்காக வேலூர் விஐடி பல்கலைக்கழகம் ஸ்பெயின் நாட்டின் யுசிஎல்எம் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து விஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டின் டோலி டோவில் அமைந் துள்ளது யுசிஎல்எம் எனும் கேசில்டா லா மஞ்சா பல்கலைக் கழகம். அந்நாட்டின் முன்னணி பல்கலைக் கழங்களில் ஒன்றான இதில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல், மருத்துவம், மேலாண் மைச் சட்டம் ஆகியவற்றில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி கல்வி பயின்று வருகின்றனர்.இந்தப் பல்கலைக் கழகத்துடன் விஐடி கல்வி, ஆராய்ச்சிப் பணிகள், மாணவர், பேராசிரியர்கள் பரிவர்த்தனைக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. அண்மையில் யுசிஎல்எம் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், யுசிஎல்எம் பல்கலைக்கழகத்தின் ஆட்சியாளர் (ரெக்டர்) மிகுல்ஏஞ்சல் கல்லோடா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து, இவ்விரு பல்கலைக்கழகங்களும் இணைந்து பொறியியல், மேலாண்மை, நானோ அறிவியல், நானோ டெக்னாலஜி, மாலிக்குலர் மெட்டீரியல்ஸ், பொருளாதாரம், வணிகம், சட்டக் கல்வி தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதுடன் பேராசிரியர்களுக்குப் பயிற்சி கருத்தரங்கம் உள்ளிட்ட பணிகளும் மேற் கொள்ளப்பட உள்ளன.