வேலூர்,அக். 12- தொழில்நுட்ப வளர்ச்சி கிராமப்புற மக்களுக்கும் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும் என்று விஐடி வேந்தர் டாக்டர்.கோ.விசுவநாதன் கூறி யுள்ளார். விஐடி வேந்தர்டாக்டர் கோ.விசுவ நாதன் கிராவிடாஸ்' 19 துவக்க விழா விற்குத் தலைமையேற்றுப் பேசிய தாவது: தொழில்நுட்பம் பெரும்பாலும் நகரத்தில்தான் பயன்படுத்தப்படு கிறது. கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது என மகாத்மா காந்தி கூறியுள்ளார், கிராமப்புறம் மற்றும் விவசாயிகளுக்குத் தேவையான கண்டுபிடிப்புகளை நாம் உருவாக்க வேண்டும், அத்தகைய கண்டுபிடிப்புகள் சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். கடைகோடி மக்களும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். கடந்த 25 ஆண்டுகளில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால் சமுதாயத்தின் அனைத்து துறைகளிலும் பொரு ளாதார வளர்ச்சி முழுமையடைய வில்லை. விரைவில் இந்த நிலை மாறவேண்டுமானால் தொழில் நுட்பம் நாட்டின் அனைத்து பகுதிக்கும் குறிப்பாக கிராமப்புறங்க ளுக்கும் சென்றடைய வேண்டும். வெளிநாடுகளிலிருந்து நாம் நிறையவற்றை இறக்குமதி செய்கிறோம், ஆனால் வருடா வருடம் அந்நிய செலாவணி நாம் அதிகரிக்கிறோம். குறிப்பாக ராணுவத் துறைக்குத் தேவையான தளவாடங்கள் அனைத்தையும் உள்நாட்டிலே உற்பத்தி செய்ய வேண்டும், இதனால் நாம் வேலை வாய்ப்பை அதிகரிக்கலாம். தொழில்நுட்ப பயன்பாட்டால் பொருட்களின் விலை குறைவ தோடு மட்டுமல்லாமல் பொருட்களின் தரம் உயரும். இந்தியாவில் 50 விழுக்காடு மக்கள் விவசாயத்தைச் சார்ந்துதான் உள்ளனர். இவர்க ளுக்கு பல்வேறு வகையான தொழில் நுட்பங்களை நாம் அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆராய்ச்சிகளை அதிகப்படுத்துக
காணொலி காட்சி மூலம் கிராவிடாஸ் '19 நிகழ்ச்சியைத் துவக்கி வைத்த மத்திய அரசின் உயர் கல்வித் துறை செயலாளர் சுப்பிரமணியம் பேசுகையில் உலக பல்கலைக் கழக தரவரிசைப்பட்டியலில் இந்திய கல்வி நிறுவனங்கள் இடம் பெறுவதற்கு நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள், ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.. உலக தரவரிசை பட்டியலில் இடம் பெறுவதற்கு நாம் கடுமையாக உழைப்பதோடு நாம் காப்புரிமை களைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கிராவிடாஸ் 19 நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரை யாற்றிய மத்திய சுற்றுப்புறச்சூழல், வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்தால்தான் இந்தியா நாட்டிற்கு உலக அளவில் பெருமை சேர்க்க முடியும் என்றார். பாபுராஜேந்திரன், உதவி துணைத் தலைவர் சொசைட்டி ஜென்ரல், தீபன்கர் பட்டாச்சார்யா, மூத்தநிர்வாகி, ஆட்டோடெஸ்க் நிறுவனம் உள்ளிட்டோர் கவுரவ விருந்தினர்களாகப் பங்கேற்று சிறப்புரையாற்றினர். விஐடி துணைத்தலைவர் டாக்டர்.சேகர் விசுவநாதன் ,செயல் இயக்குனர் டாக்டர் சந்தியா பெண்ட்ட ரெட்டி, துணைவேந்தர் டாக்டர்ஆனந்த் ஆ.சாமுவேல், இணை துணை வேந்தர் டாக்டர் எஸ்.நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.