tamilnadu

img

பாலாற்றங்கரையில் மணல் கடத்துவதால் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடையும் அபாயம்

வேலூர், ஜூலை 20- ஆம்பூர் பாலாற்றங்கரையோரம் இரவு பகலாக மணல் கடத்துவதால் காவிரி கூட்டு குடிநீர் பைப்லைன் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆம்பூர் மேல்கிருஷ்ணாபுரம் -  சாணாங்குப்பம் பகுதி அருகே தனி யாருக்கு சொந்தமான நிலம் உள்ளது.  அந்த நிலத்தில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு மணல் அள்ளுவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு  சென்று பார்த்த போது 2 பொக்லைன்  எந்திரம் மூலம் மணல் அள்ளப்பட்டு லாரி மூலம் மணல் கடத்துவது தெரிய வந்தது. இதையடுத்து பொதுமக்கள் 2 பொக்லைன் எந்திரம், 4 டிப்பர்  லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் காவல்துறையினர் வாகனங்களை பறிமுதல் செய்தனர். அப்போது கழிவு மண் எடுக்க மாவட்ட கனிம வள உதவி இயக்குனர் அனுமதி வழங்கியதாக கூறியதன் பேரில் பொக்லைன் எந்திரம், லாரிகள் விடு விக்கப்பட்டன. பாலாற்றில் உள்ள மணல் முழுவ தும் அள்ளப்பட்டு தற்போது பாலாறு  கட்டாந்தரையாக காணப்படுகிறது. எனினும் பாலாற்றங்கரையோரம் உள்ள நிலங்களில் மணல் படுகைகள் காணப்படுவதால் அந்த நிலங்களில் கழிவுமண் அகற்றுவதாகக் கூறி வருவாய்த்துறை, கனிமவளத்துறை, பொதுப்பணித்துறை உதவியுடன் பாலாற்றை ஒட்டியுள்ள கரைப்பகுதி யிலும் மணல் அள்ள ஆரம்பித்துள்ள னர். இதனை தடுக்க வேண்டிய  காவல்துறையோ, வருவாய்த் துறையோ மவுனமாக உள்ளது. இங்கிருந்து அள்ளப்படும் மணல்  ஒரு இடத்தில் குவிக்கப்பட்டு அங்கி ருந்து வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. கடத்தலுக்கு காவல்துறையினரும், வரு வாய்த்துறையினரும் உடந்தையாக இருப்பதால் போராட்டம் நடத்து வதே பொதுமக்களின் வேலையாக மாறிவிட்டது. இவ்வாறு மணல் அள்ளுவதால் அருகில் உள்ள மற்ற நிலங்களில் மண் அரிப்பு ஏற்  படுவதோடு மட்டுமல்லாமல் நிலத்தடி  நீர்மட்டம் பாதிக்கப்படும் என  பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ள னர். மணல் கடத்தப்படுவதால் பாலாற்று படுகையே ஆம்பூர் பகுதி யில் காணாமல் போகும் நிலை உரு வாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல் பாலாறு வழியாகத்தான் வேலூர் மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் காவிரி கூட்டு குடிநீர் பைப்லைன் செல்கிறது. ஏற்கனவே பச்சகுப்பம் பகுதியில் குழாயில் ஏற்பட்ட பாதிப்பு  காரணமாக ஒரு மாதம் வேலூருக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை  ஏற்பட்டது. தற்போது பாலாறு பகுதி யில் குழாய் அமைக்கப்பட்டுள்ள இடத்தை சுற்றியிலும் மணல் கடத்தல் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் குடிநீர் குழாய் ஆங்காங்கே துண்டிக்கப்படும் நிலை உள்ளது. பாலாற்று பகுதியில் தனியார் நிலம் மட்டுமின்றி பாலாற்றில் மணல் கடத்துவதை தடுத்து நிறுத்த அதி காரிகள் முன் வரவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.