வேலூர், செப். 17- வேலூரை அடுத்த கீழ் பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். தனது மனைவி, மகளுடன் ஆட்சிய ரிடம் புகார் அளித்தார். அந்த மனுவின் விவரம் வருமாறு:- கீழ்பள்ளிப்பட்டு கிரா மத்தில் கடந்த 14-ஆம் தேதி சகுந்தலா என்பவர் விபத் தில் இறந்தார். அவரது உட லுக்கு நான் குடும்பத்துடன் சென்று அஞ்சலி செலுத்தி னேன். அப்போது, எங்களை சிலர் வெளியேற்றினர். இதேபோல், கடந்த இரு மாதத்துக்கு முன் நடந்த காந்தம்மாளின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற போதும், எங்களை வெளி யேற்றினர். துக்க நிகழ்ச்சி யில் பங்கேற்றதற்காக அபா ரதமும் விதித்தனர். அப் போதுதான் கோவிலுக்கு வரி கொடுக்காததால் எங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர். இதனால், எங்கள் குடும்பம் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி யுள்ளது. எங்களை ஒதுக்கி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். இதனிடையே, மனு அளிக்க வந்த ஒருவர் திடீ ரென தான் கொண்டு வந்தி ருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தன் மீது ஊற்ற முயன்றார். அப்போது, அங்கி ருந்த காவல்துறையினர் அதைத் தடுத்து அவர்களை அழைத்து விசாரித்ததில், அவர் காட்பாடி வெங்கடே சபுரத்தைச் சேர்ந்த சீனிவா சன் என்பது தெரியவந்தது. மேலும், அடகு கடையில் வேலை செய்து வரும் அவ ரின் வீட்டின் அருகே 2 மனை கள் உள்ளதாம். முன்விரோ தம் காரணமாக அந்த மனை களைச் சேர்ந்தவர்கள் அடி யாட்கள் உதவியுடன் கொலை மிரட்டல் விடுப்பதாக வும், இதுதொடர்பாக, கடந்த ஆண்டு காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித் தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 12ஆம் தேதி சிலர் அவரை தாக்கியதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக புகார் அளித் தும் காவல்துறையினர் நட வடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட சீனிவாசன், ஆட்சியர் அலுவலக வளா கத்தில் தீக்குளிக்க முயன் றது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தின் மீது விரை வான நடவடிக்கை எடுக் கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.மாவட்ட வரு வாய் அலுவலர் ஜெ.பார்த்தீ பன், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நல அலுவலர் லூர்துசாமி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவ லர் செந்தில்குமாரி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.