வேலூர், அக்.10- வேலூர் திருவலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை யில் விவசாயிகளுக்கு 2018-19ஆம் ஆண்டுக்கான கரும்பு நிலுவைத் தொகை பாக்கி ரூ.10 கோடி, தமிழக அரசு 2018-19 ஆம் ஆண்டு வழங்க வேண்டிய ஊக்கத் தொகை ரூ.2 கோடி, 2013 முதல் 2017 வரை தமிழக அரசு வழங்க வேண்டிய பாக்கி ரூ.25 கோடி, லாபத் தில் பங்கான 1.50 கோடி, மொத்தம் ரூ.40 கோடியை தீபாவளிக்கு முன்பாக வழங்க வலியுறுத்தி தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக காத்திருப்பு போராட்டம் வேலூர் கூட்டு றவு சர்க்கரை ஆலை அலுவ லகம் முன்பு தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்தி ரன் துவக்கி வைத்துப் பேசி னார். மாநிலக்குழு உறுப்பி னர் சி.பெருமாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ப.சக்திவேல், மாவட்டத் தலைவர் எல்.சி. மணி, மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ், நிலவுகுப்புசாமி, கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ஏ. செந்தில் நாதன், தமிழ்மணி, சிரஞ்சீவி, பழனி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போது வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குநர் கிரேஸ் லால் ரிண்டிகி பச்சாவு, போராட் டக்குழு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அவ ரிடம் பாக்கித் தொகையை வழங்கும் வரை உணவு சமைத்து சாப்பிட்டு இரவு பகல் பாராமல் அங்கேயே தங்கி தொடர் போராட்டத் தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.