tamilnadu

img

மேகதாது அணைக்கு அனுமதி அளித்த கட்சியுடன் கூட்டணியா?

ஏப்.1-மேகதாது அணைக்கு அனுமதி அளித்த கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்ட அதிமுக, பாமக கட்சிகள் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.வேலூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியது வருமாறு:- மத்தியில் என்றைக்கு மோடி பிரதமராக பதவியேற்றாரோ அன்றிலிருந்து அரசியலமைப்புச் சட்டத் திற்கு எதிராக செயல்படுவது தான் அவருடைய வேலையாக தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றது. அரசியலமைப்பு சட்டத்தால் அங்கீ கரிக்கப்பட்ட அனைத்து அமைப்பு களையும் சுதந்திரத்தை பறித்து அதனை சிதைப்பதுதான், மோடியின் கொள்கையாக இருக்கிறது. உச்சநீதிமன்றமா நீதிபதிகளே மிரள்கிறார்கள். ரிசர்வ் வங்கியா கவர்னர்கள் ஓடுகின்றார்கள். சி.பி.ஐ-யா அலுவலகத்தையே பூட்டு கின்றார்கள். மத்திய கண்காணிப்பு ஆணையமா, செயல்படக்கூடாது என்று மிரட்டுகின்றார். தகவல் ஆணையமா எந்த தகவலும் வராது.லோக்பால் அமைப்பா, அமைக்க மாட்டோம். லோக் ஆயுக்தா அமைப்பை அமைக்க மாநிலங்களை நாங்கள் கேட்க மாட்டோம். காவிரி பிரச்சனையா, தீர்ப்பை அமல்படுத்த மாட்டோம்.


நாடாளுமன்றமா, அங்கே நான் வரமாட்டேன். நாடாளுமன்ற விவாதமா, அதில் நான் நிச்சயமாக பங்கேற்க மாட்டேன். பத்திரிகையாளர்களை சந்திக்கவேமாட்டேன். அரசு விழாவா தேசிய கீதத்திற்கு கூட நான் எழுந்து நின்று காத்திருக்கமாட் டேன். இப்படி ஒரு பிரதமரை இந்தியாவில் இதுவரையில் நாம் பார்த்தது இல்லை, இனிமேலும் நிச்சயமாக பார்க்க முடியாது. எனவே, இப்படிப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய இந்த பிரதமரை அப்புறப்படுத்த வேண்டும்.அதேபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் காவிரி பிரச்சனையில் திமுக துரோகம் செய்துவிட்டது என்று தவறான பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். காவிரி நதிநீர் பிரச்சனை யில், காவிரியின் குறுக்கே மேகதாதுஅணையை கட்ட அனுமதி வழங்கிஇருக்கக்கூடிய பாஜகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டவர்கள் திமுகவை குறை சொல்வதற்குஎன்ன தகுதி இருக்கின்றது. வி.பி.சிங் பிரதமராக இருந்த நேரத்தில் தான் காவிரி நடுவண் மன்றத்தை அமைத்து, நடுவண் மன்றத்திற்கு அதிகாரத்தையும் பெற்றுத் தந்தவர்கலைஞர் ஆவார். காவிரி நதிநீர்ஆணையத்தை அமைக்க வைத்த வரும், இறுதித் தீர்ப்பை வாங்கித் தந்தவரும் கலைஞர் தான். இதை யெல்லாம் மறைத்துவிட்டு காவிரி நதிநீர்ப் பிரச்சனையில் திமுக துரோகம் செய்துவிட்டது என்று சொல் வது வரலாறு தெரியாதவர்கள் பேச்சாகத்தான் இருக்கும்.


ஜெயலலிதா மரணம்தொடர்பாக கேள்வி கேட்டால் அதைப்பற்றி பேசக்கூடாது என்கிறார்முதல்வர். கொடநாடு கொலை விவகாரம் குறித்தும் நமது கேள்விகளுக்கு இவர்களால் பதில் சொல்லமுடியவில்லை. அதனால்தான் பயந்துபோய் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்திருக் கிறார்கள். இதைப்பற்றி இவர்கள் பேசக்கூடாது என்று நீதிமன்றத் திற்குச் சென்று தடை உத்தரவும் வாங்கியுள்ளார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.