வேலூர், மார்ச் 17 - வேலூர் அடுத்த தொரப்பாடியில் தந்தை பெரியார் அரசு தொழில் நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் நூலகராக பணியாற்றி வரும் தாமோதிரன் என்பவர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக கூறப் படுகிறது. அண்மையில் நூலகத்தை சுத்தம் செய்ய 3 மாணவிகளை வரவைத்து அவர்களிடம் தாமோதிரன் தவறாக நடந்துள்ளார். இது குறித்து கல்லூரி முதல்வர் மற்றும் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித் துள்ளனர். ஆனால் புகார் மீது நடவடிக்கை எடுக்கா மல், காவல் துறையினர் மாணவிகளை மிரட்டிய தாகக் கூறப்படுகிறது. இதனால் ஆவேச மடைந்த மாணவர்கள் செவ்வாயன்று (மார்ச் 17) கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்ட நிலையிலும், கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நூலகர் தாமோதிரனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய கல்லூரி தொல் நுட்பப் பிரிவு இயக்குனர் விவேகானந்தன் உத்தர விட்டுள்ளார். பின்னர், மாணவர்கள் நூலகர் தாமோதிரனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சமூக நலத்துறை அதிகாரிகள் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து போ ராட்டம் கைவிடப்பட்டது. மேலும் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாணவி களை அழைத்துச் சென்ற சமூக நலத்துறை அதிகாரி கள் மீண்டும் புகார் கொடுக்க வைத்தனர். இதையடுத்து வேலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் நூலகர் தாமோதிரனை அழைத்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.