tamilnadu

img

அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் படுகொலை சாதிய வன்மச்செயலுக்கு சிபிஎம் கடும் கண்டனம்.... குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வலியுறுத்தல்...

சென்னை:
அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

அரக்கோணம் பகுதியில் அர்ஜூன், சூர்யா என்ற இரு தலித்இளைஞர்கள் கொடூரமாக கொலைசெய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இவர்களோடு தாக்குதலுக்கு உள்ளான இரண்டுஇளைஞர்கள் பலத்தக் காயங்களுடன் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சாதிய வன்மத்தோடு நடைபெற்றுள்ள இப்படுகொலையினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் க.டசியின் மாநிலச் செயற்குழு கடுமையானகண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

அரக்கோணத்தை அடுத்த  சோகனூர் கிராமத்தைச்சார்ந்த அர்ஜூன்,சூர்யா, மதன், வல்லரசு, சவுந்தராஜன் ஆகிய தலித் இளைஞர்களை,  பாமக மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள், நீங்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டதாகவும், நாங்கள் திமுககூட்டணிக்குத்தான் வாக்களித்தோம் என்று பதிலளித்துள்ளனர். இதனையொட்டி இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், மேற்கண்ட இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.  ஏற்கனவே,இரு கிராமத்தில் இருந்தவர்களுக் கிடையில் சில பிரச்சனைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.  அதன் தொடர்ச்சியாகவே சாதிய வன்மத்துடன் இந்தப் படுகொலை நடந்துள்ளது.

தமிழகம் முழுவதும் சட்டமன்றத்தேர்தல் பெருமளவு அமைதியாக நடந்துள்ள சூழ்நிலையில், அரக்கோணத்தில் நடந்துள்ள இந்த கொடூரச் சம்பவம் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அராஜக நடவடிக்கைகளுக்கு நாகரிகமக்கள் சமூகம் ஒருபோதும் இடம் கொடுக்கக்கூடாது.படுகொலை செய்யப்பட்ட அர்ஜூன், சூர்யா ஆகியோரின் குடும் பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு அரசு தலா ரூ.50 லட்சமும், படுகாயமடைந்த குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சமும் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் படுகொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து அதிகபட்ச  தண்டனைபெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழக காவல்துறை யையும் தமிழக அரசையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயற்குழு வலியுறுத்து கிறது.தற்போது அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்ககாவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், அப்பகுதியில் அனைத்துத்தரப்பு மக்களும் அமைதிகாக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.