tamilnadu

img

பால் கொள்முதலில் 7 ஆண்டுகளாக மோசடி விவசாயிகள் குற்றச்சாட்டு

வேலூர், அக். 6- வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுக்காவில் நீண்டகண்ட ராயன்பேட்டை ஆவின் பால் கூட்டு றவு சங்கம் மூலமாக விவசாயிகளிட மிருந்து காலையில் 1,050 லிட்டர் பால், மாலையில் 860 லிட்டர் பால் என ஒரு நாளைக்கு 2,008 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் சொசைட்டியின் தலைவராக எம்.சிதம்பரம், செய லாளராக டி.கிருபாகரன் ஆகியோர் உள்ளனர். அளவை முகவர்களாக எம்.செல்வம், ஜி.பாஸ்கரன், ஏ.தட்சணாமூர்த்தி, என்.சுகுமார், டி.விஜய், எஸ்.வையாபுரி  ஆகியோர் வேலை செய்கிறார்கள். கடந்த செப்டம்பர் மாதம் வெண்டர் பால் அளந்து் வாங்கும் போது, ஒரு லிட்டர் அளவைக்கு பதில், ஒன்னேகால் லிட்டர் கொள்ளவு கொண்ட அளவை யில் அளந்ததைக் கண்டு அதிர்ச்சி யடைந்த விவசாயிகள் அந்த முகவரை கையும் களவுமாக பிடித்து, காவல்துறையில் புகார் அளித்தனர். வெண்டர்கள் பயன்படுத்தி வந்த பால் அளவையில் 2011ஆம் ஆண்டு முத்திரை இருந்துள்ளது. விவசாயிகளிடமிருந்து கடந்த 7 ஆண்டுகளாக முறைகேடாக பால் அளந்து வாங்கியுள்ளதாக விவசாயி கள் கூறுகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து விவசாயிகள் பால் கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூட்டுறவு சார்பதிவாளர் எஸ்.ஜெயவேலு, உதவி ஆய்வாளர் எம்.லதா, ஆவின் மேலாளர் எச்.லிடியா, வருவாய் ஆய்வாளர் லோகேஷ், கிராம நிர்வாக அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகி யோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தி னர். பேச்சுவார்த்தையில் வேலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் எல்.சி.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுக்கா செயலாளர் என்.ரமேஷ், தலைவர் நிலவு குப்புசாமி, கிராம விவசாயி கள் கலந்து கொண்டனர்.  விவசாயிகள் பால் அளக்கும் அளவையை முறையாக ஆண்டுக்கு ஒருமுறை அரசு முத்திரை வைத்துதான் பயன்படுத்த வேண்டும் என்ற விதியை புறந்தள்ளி விட்டு, முறைகேடாக கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பால் அளந்து வாங்குவதாகவும் கூறினர். எனவே பால் முகவர்கள் கடந்த 7 ஆண்டுகளாக வாங்கிய பாலின் அளவை கணக்கிட்டு, அதற்கான நஷ்டஈடு வழங்க வேண்டும், வெண்டர்களை மாற்ற வேண்டும், பாலை அளக்கும் அளவைக்கு ஆண்டுதோறும் முத்திரை பதிய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதற்கு பதிலளித்த அதிகாரிகள், கூட்டுறவு சங்க மாவட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். இதுகுறித்து எல்.சி.மணி கூறுகையில், கடந்த 7 ஆண்டு களில் வெண்டர்கள் விவசாயி களிடமிருந்து பால் வாங்கியதில் சுமார் 1 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருக்கலாம் என்றார். இதுகுறித்து ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ள தாகவும் அவர் கூறினார்.