குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
முன்னதாக, உடுமலை கோட்டாச்சியர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு குறைதீர்க்கும் கூட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி விவசாயிகள், அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர் அனைவரும் வந்த நிலையில் கூட்ட அரங்கில் போதிய நாற்காலிகள் இல்லாத காரணத்தால் ஓரு மணி நேரத்திற்கும் மேல் விவசாயிகள் நின்று கொண்டு இருந்தால் கூட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இவ்வாறு கூட்டத்திற்கு முறையாக ஏற்படாடு செய்யாமல் இருந்த வருவாய்த் துறையின் மீது விவசாயிகள் பெரும் அதிருப்தியடைந்தனர். இதற்கிடையே வருவாய்த் துறை அதிகாரிகளை காப்பாற்றும் வகையில் வருவாய்த் துறைக்கு ஆதரவான சில விவசாயிகளை மட்டும் முதலில் பேச வைப்பதாவும் விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள். மேலும் தங்களுக்கு பிடித்த பத்திரிகைகளுக்கு மட்டும் தகவல் தருவது குறித்தும் கோட்டாசியரிடம் கேள்வி எழுப்பப்பட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
உடுமலை, நவ. 27- படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் குளறு படி நிலவுவதாக உடுமலையில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட் டத்தில் விவசாயிகள் குற்றச்சாட் டினர். உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதனன்று கோட்டாச்சியர் இந்திரவள்ளி தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற் றது. இந்தகூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசுகையில், தமி ழகத்தில் விற்பனையாகும் பாலில் நச்சுத்தன்மை அதிகமாக உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்தது குறித்து, இன்று வரை தமிழக அரசு மறுப்பு எதுவும் தெரிவிக் காமல் உள்ளது விவசாயிகளை கடுமையான வேதனை அடைய வைத்து உள்ளது. எனவே, தின மும் ஒரு கோடியே 35 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகும் தமி ழகத்தில் எந்த நிறுவனத்தின் பால் நச்சு தன்மை கொண்டது என்று தெரிவிக்க வேண்டும். பாலின் தரம் பற்றி தெரித்து கொள்ள தமிழகத்தில் ஆய்வு நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், இப்பகுதியில் வன விலங்குகள் விவசாய நிலங் களை அழித்த காலம் போய், தற் போது மனித உயிர்கள் பலியா வது அதிகரித்து வருகிறது. ஆகவே, விவசாயிகளின் வாழ் வாதரம் காக்கும் வகையில் காட்டு பன்றியை வன விவங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் . வன விலங்குகள் தாக்கினால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதே போல் உடுமலை பாலாற்றில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதில் சுமார் 815 தென்னை மரங்கள் ஆற்றின் வழி தடத்தை மாற்றும் வகையில் உள்ளது என்று பல முறை வரு வாய்த் துறை கவனத்திற்கு கொண்டு சென்றும் இன்று வரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. ஆகவே, இதுதொடர் பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசு கோயில் மற்றும் அரசு நிலத் தில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்கபடும் என்று அர சாணை 318யின் படி அனை வருக்கும் பட்டா வழங்க வேண் டும். மடத்துகுளம் அமாரவதி சக் கரை ஆலையில் விவசாயிக ளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடி யாக வழங்க வேண்டும்.
உடுமலை எஸ்.வி. புரம் முதல் கண்ணமநாய்கனூர் வரை யில் உள்ள சாலையில் தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2016 ம் ஆண்டு முதல் கோரிக்கை வைத்தும் இன்றுவரை வரு வாய்த் துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது ஏன் என் றும், விவசாயிகளின் இருந்து பெறப்பட்ட விண்ணப்பத்தின் படி வெங்காய விதைகளை தோட் டக்கலை துறை காலம் தாழ்த்தா மல் வழங்க வேண்டும். பெரிய கோட்டை ஊராட்சிக்கு உட் பட்ட முத்துநகர், மின்நகர் பகுதி யில் உள்ள பூங்கா உள்ளிட்ட மக்களின் தேவைகளுக்கு ஒதுக் கப்பட்ட இடங்களில் தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது. இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தினர்.