tamilnadu

img

தெருவில் திரியும் பசுக்களை பராமரிக்கும் வேலை!

லக்னோ:
தெருவில் திரியும் கால்நடைகளைப் பராமரிக்கும் திட்டம் மூலம், உத்தரப்பிரதேச இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று அம்மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது.இதற்காக, ‘முக்கிய மந்திரி பி சஹாரா கவு வன்ஷ் சபாகிதா யோஜனா’ என்ற திட்டத்தையும், அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பாக உத்தரப்பிரதேச அரசு மேலும் கூறியிருப்பதாவது:

“2012-ஆம் ஆண்டு புள்ளி விவரங் களின்படி மாநிலத்தில் 2 கோடியே 46 லட்சம் கால்நடைகள் இருக்கின்றன. இதில் 10 முதல் 12 லட்சம் கால்நடைகள் உரிமையாளர்களின் பராமரிப்பின்றி சாலைகளிலும் தெருக்களி லும் அலைகின்றன.இந்த கால்நடைகளைப் பராமரிப்பதற்காக அரசு சார்பில் 523 கோசாலைகள் செயல்படு கின்றன. இருப்பினும் சாலைகளில் அலையும் பசுக்களை பராமரிக்க முடியாத நிலை உள்ளது. இதற்காக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
இந்த திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஒரு லட்சம் பசுக்கள் பயன்படுத்தப்படவுள்ளன. பசுக்களை பராமரிக்க விரும்புவோர் ஒவ்வொருவருக்கும் அவர்கள் கேட்கும் பசுக்கள் தரப்படும். பசுக்கள் ஒவ்வொன்றின் பராமரிப்புச் செலவுக்கு தினமும் தலா 30 ரூபாய் வீதம் மாதந்தோறும் ஒரு பசுவின் பராமரிப்புக்கு ரூ. 900 வழங்கப்படும்.இதுபோல் ஒருவர் எத்தனை பசுக்களை வேண்டுமானாலும் சொந்தப் பராமரிப்பில் வளர்க்கலாம். விருப்பம் உள்ள விவசாயிகள் இந்த திட்டத்தில் இணையலாம். ஒவ்வொரு பசுவின் பராமரிப்புத் தொகையும் வளர்ப்பவரின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இந்த திட்டத்துக்காக ரூ. 109 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.”இவ்வாறு உத்தரப்பிரதேச அரசு கூறியுள்ளது. அதாவது, மாடு வளர்ப்பை, அரசாங்க வேலைக்கு இணையான ஒன்றாகக் காட்டி ஜம்பம் அடித்துள்ளது.உத்தரப்பிரதேச பாஜக அரசானது, 2019-20 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மாநிலத்தில் கால்நடை வளர்ச்சி, பராமரிப்புகாக ரூ. 600 கோடியை ஒதுக்கியிருக்கிறது. ஆனால் குழந்தைகளின் ஆரம்பக் கல்வி, உயர்கல்வித் திட்டங்களுக்குச் சேர்த்து மொத்தமே ரூ. 500 கோடிதான் ஒதுக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.