tamilnadu

img

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் பலி 23 ஆனது

லக்னோ,டிச.22-   மக்களை பிளவுபடுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டம் நாடு முழு வதும் நடைபெற்று வருகிறது. இதில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு பலர் பலியாகியுள்ளனர்.  இதில் உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.கான்பூர், ராம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமையன்றும் போராட்டம் நடைபெற்றது.   கான்பூரின் பாபுபுர்வா பகுதியில் ஒருவரும், ராம்பூரில் ஒருவரும் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. தொடரும் பதற்றத்தால் பல மாவட்டங்களில் இணைய சேவை தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளது.கான்பூரில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை அதிகாரி ஒரு வர் கைத்துப்பாக்கியால் சுடும் காட்சி வெளியாகியுள்ளது. போராட்டத்தில் ஈடுபடு பவர்களை பழிவாங்குவோம் என்ற பாணியில் செயல்படும் பாஜக முதல்வர் யோகி ஆதித்ய நாத் அரசு, முசாபர்நகரில் 50  கடைகளுக்கு அரசு சீல் வைத்துள்ளது.   குடியுரிமை சட்டத்திருத்தத் திற்கு எதிரான போராட்டத்தில்  உத்தரப்பிரதேசம், கர்நாடகம், அசாம் ஆகிய மாநிலங்களில் இது வரை 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.