உன்னாவ், ஏப். 13 -தனக்கு வாக்களிக்காத மக்களுக்கு, பாவங்கள் வந்து சேரும் என்று தற்போதைய பாஜக எம்.பி.யும், உன்னாவ் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான சாக்சி மகராஜ் கூறியுள்ளார். தனக்கு வாக்களிக்காதவர்களுக்கு, சாபம் இடுவேன் என்றும் ‘ஆன்மிக மிரட்டல்’ விடுத்துள்ளார். “துறவி ஒன்றைக் கேட்டு, அதைத் தராதவர்கள் இதுவரை சேர்த்துவைத்த அனைத்து புண்ணியங்களும் போய் விடுவதுடன், பாவங்கள் வந்து சேரும்” என்று நமது சாஸ்திரங்களில் உள்ளது. அந்த வகையில் ஒரு துறவியாகிய நான் கேட்டபடி வாக்குகளை எனக்கு அளிக்காவிட்டால் உங்களைப் பாவம் பீடிக்கும்” என்று சாக்சி மகராஜ் கூறியுள்ளார்.“நான் என்ன உங்களின் சொத்துக்களையா கேட்கிறேன்..? வாக்குகளைத்தானே கேட்கிறேன்?” என்றும் சாக்சி குறிப்பிட்டுள்ளார்.