காஜிப்பூர்:
உத்தரப்பிரதேசம், பீகார், பஞ் சாப் மற்றும் ஹரியானாவில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்நள்ளிரவில் திடீரென இடமாற்றப் பட்டதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
அதற்கேற்ப, வாகனம் மூலம், வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஓரிடத்தில் இருந்து, மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும் வீடியோக்களும் சமூகவலைத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தின் சந்தவ்லி மக்களவைத் தொகுதியில், ஓர் வாகனத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் இறக்கப்பட்டு, அது வாக்கு எண் ணிக்கை நடைபெறும் அறையில் வைப்பது போன்றும், அப்போது சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள், ‘எதற்காக வாக்குப் பதிவு இயந்திரங்கள் இப்போது இறக்கி வைக்கப்படுகின்றன’ என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்புவது போன்றும் வீடியோ காட்சி ஒன்று செவ்வாய்க்கிழமையன்று காலை வெளியானது.
அதேபோன்று, வாக்குப்பதிவு இயந்திரங்களை, அவை வைக்கப்பட்டிருக்கும் அறையில் இருந்து, வாகனத்தில் ஏற்றும்போது உத்தரப்பிரதேசத்தின் காஜிப்பூர் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் அப்சல் அன்சாரி, போலீசார் முன்பு தர்ணாபோராட்டத்தில் ஈடுபடும் வீடியோவும் வைரலாகியுள்ளது.பகுஜன் சமாஜ் வேட்பாளர் அன்சாரி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் மாநிலத்தில் மகாராஜ் கன்ஜ், சரண் மக்களவைத் தொகுதியில் நள்ளிரவில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிபுகார் எழுப்பியுள்ளது.“வடஇந்தியா முழுவதும் வாக்கு இயந்திரங்கள் நள்ளிரவில் திடீரென இடமாற்றம் செய்யப்படும் வீடியோக்கள் வருகின்றன.ஏன் இடமாற்றம் செய்யப்படுகின் றன. இந்த வாக்கு இயந்திரங்களை யார் இடமாற்றம் செய்வது. எந்த காரணத்துக்காக இடமாற்றம் செய்கிறார்கள், அதன் நோக்கம் என்ன?” என்று பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பஞ்சாப்பில் வாக்குப் பதிவு முடிந்த பிறகு, சில வாக்கு இயந்திரங்களை மட்டும் தனியாகக்கொண்டு வந்து அங்கீகரிக்கப்படாத வாகனத்தில் வைக்கப்படுவதை பொதுமக்களே வீடியோ எடுப்பதுபோன்றும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இதுபோன்ற பலவீடியோக்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள தோமாரியாகஞ்ச் தொகுதியில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் ஓர் வாகனம் நிறைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களை, சமாஜ்வாதி கட்சியினர் சுற்றிவளைத்துப் பிடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.