tamilnadu

img

காசி விஸ்வநாதர் கோயிலில் ஆடைக்கட்டுப்பாடாம் 

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்குள் நுழையும் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
உத்தரபிரசேத்தில் யோகி ஆத்தியநாத் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. 
உத்திரப்பிரசேத மாநிலத்தில் உள்ள வாரணாசியில் உள்ள  காசி விசுவநாதர் கோவிலில் கருவறைக்குள் நுழைய பக்தர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. புதிய விதிப்படி, ஆண்கள் இந்து பாரம்பரிய உடையான வேட்டி-குர்தா மற்றும் பெண்கள் சேலை அணிய வேண்டும். மேலும் இந்த கோவிலுக்குள் நுழைய பக்தர்கள் காலை 11 மணி வரை அனுமதிக்கப்படுவர். இந்த முடிவை காசி வித்வத் பரிஷத் எடுத்துள்ளது. இந்த விதி கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும், மேலும் பேன்ட், சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்தவர்கள் தூரத்திலிருந்து தெய்வத்தை வணங்க முடியும். அவர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 
இந்த புதிய விதியை அமல்படுத்துவதற்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.