tamilnadu

img

கடைகளில் தொங்கும் எதிர்ப்பு அட்டைகள் வாராணாசி வர்த்தகர்கள் மோடிக்கு எதிர்ப்பு

வாரணாசி:

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி-யால் வணிகர்கள் மத்தியில் பாஜக கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. பிரதமர் மோடியின் பொருளாதார நடவடிக்கைகளால், தங்களின் வாழ்க்கை நடுத்தெருவுக்கு வந்து விட்டதாக வணிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த எதிர்ப்பு, தற்போது- பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும், பாஜக-வுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. இங்குள்ள வர்த்தகர்கள், மோடிக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட அட்டைகளைக் கடைகளில் தொங்க விட்டு, எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தியில் “ஏக் ஹி ஃபூல் - கமல் கி ஃபூல்” என எழுதப்பட்ட அட்டைகளை கடைகளில் அவர்கள் தொங்கவிட்டுள்ளனர். அதாவது, ‘நாங்கள் செய்த ஒரே தவறு; தாமரைக்கு வாக்களித்தது மட்டுமே’ என்று அட்டையில் அவர்கள் எழுதி வைத்துள்ளனர்.  வேறு சில வாசகங்களில், “மோடிஜி.. ஒரு உதவி செய்யுங்கள்; முதலில் எங்களுக்கு உணவுக்கு வழி செய்யுங்கள்; அதன்பிறகு எக்ளை வேலையற்றவராக மாற்றுங்கள்” என்றும் எழுதி வைத்துள்ளனர்.மே 19-ஆம் தேதி வாரணாசி தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள வர்த்தகர்கள், இவ்வாறு மோடிக்கு எதிராக பிரச்சாரத்தில் இறங்கியிருப்பது, பாஜக தலைவர்களை கலக்கத்தில் தள்ளியுள்ளது.