tamilnadu

img

உ.பியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்ட எதிரொலி : 144 தடை 

உத்தரபிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடுமுழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு போலீசார் மீது வழக்கு தொடரப்படும் என்று நஜ்மா அக்தர் தெரிவித்துள்ளார்.  மேலும் உயர்மட்ட விசாரணைக்கு வலியுறுத்துவோம் என்று நஜ்மா தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜாமியா பல்கலை மாணவர்கள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உத்தபிரதேசத்தில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிழவுகிறது. இதைத்தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீரட் லக்னோ உள்ளிட்ட பல பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.