tamilnadu

img

நாடாளுமன்ற வளாக பகுதியில் 144 தடை உத்தரவு

தில்லி நாடாளுமன்ற வளாக பகுதியில் இன்று 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி டிசம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர்.  இதையடுத்து தில்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 
இருப்பினும் ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்று கொண்டிருந்த போது, அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமானசூழல் ஏற்பட்டது.