உத்திரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் , பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ராம்நகர் பகுதியில் நேற்று விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அருகாமையில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் வாங்கி குடித்தனர்.இதையடுத்து பலர், ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ராம்நகர் ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்றால் ரூ.10 லட்சம் அபராதம், ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.