tamilnadu

img

தடுப்பூசியே கொரோனாவைக் கட்டுப்படுத்தும்; உலகை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும்

ஐ.நா.பொதுச்செயலாளர் பேச்சு

ஐக்கிய நாடுகள் சபை,ஏப்.16- ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோணியா குத்ரோஸ் உறுப்பு நாடுகளான 47-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்கா நாடுகளுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது :- பாதுகாப்பான மற்றும் பயனுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி மட்டுமே உலகை இயல்பு நிலைக்குக் கொண்டு வரும். இந்தாண்டு இறுதிக்குள் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும்.

தடுப்பூசி மட்டுமே கோடிக்கணக்கான உயிர்களையும், எண்ணற்ற டிரில்லியன் டாலர்களையும் காப்பாற்றக்கூடிய ஒரே கருவியாக இருக்கும்.

 "2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இதுபோன்ற தடுப்பூசியை உலகளாவிய ரீதியில் பயன்படுத்துவதற்குத் தேவையான வேகத்தையும் அளவையும் அதிகரிக்க சர்வதேச நாடுகள் இணக்கமான, ஒருங்கி ணைந்த, செயல்பாட்டை உறுதிசெய்ய நாம் அனைவரும்த முயலவேண்டும் கொரோனா தொற்றுநோயைக் கட்டு ப்படுத்த வேண்டுமென்ற மனிதாபிமான அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபை மார்ச் 25-ஆம் தேதி இரண்டு பில்லியன் டாலர் (நன்கொடை) தேவை என அழைப்பு விடுத்தது. அதில் 20 சதவீதம் திரட்டப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு மூலம், 47 ஆப்பிரிக்க நாடுகளை கொரோனா சோதனைக்கு தயார்படுத்த ஐக்கிய நாடுகள் சபையால் முடிந்தது என்றார். தொற்று பரவுவதைத் தடுக்க ஆப்பிரிக்க நாடுகள் மேற்கொண்ட முயற்சியையும் அந்தோணியா குத்ரோஸ் பாராட்டினார்.