வாஷிங்டன்,ஜூன் 23- எச் -1 பி விசா முறையை சீர்திரு த்தம் மற்றும் தகுதி அடிப்படையில் வழங்குமாறு அமெரிக்க அதி பர் டொனால்டு டிரம்ப் தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ள தாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்துள்ள ஒருவர் 60 நாட்கள் மட்டுமே வசிக்க முடியும். அதன் பின்பு தாய்நாட்டுக்கு திரும்ப வேண் டும் என்பது அங்கு சட்டமாக உள்ளது.
இந்நிலையில் எச் -1 பி விசா முறையை “சீர்திருத்த” மற்றும் தகுதி அடிப்படையில் வழங்கு மாறு அதிபர் டொனால்டு டிரம்ப் தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட தாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவர்களுக்கு வழங்கப் படும் ஜே 1 விசாக்களும் இனி கொரோனாவை குணப்படுத்த முன்வரும் மருத்துவர்களுக்குத் தான் வழங்கப்படும் என்றும் அமெரிக்கா புதிய கெடுபிடிகளை அறிவித்துள்ளது.