மெக்ஸிகோவில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையின் குறுக்கே முதலை ஒன்று சாவகாசமாக ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஜூனாச்சோ என்ற இடத்தில் அண்மையில் ஒரு காலைப் பொழுதில் வாகனங்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நேரத்தில், அருகில் இருந்த ஏரியில் இருந்து வெளியேறிய 10 அடி நீளமுள்ள முதலை ஒன்று சாலையின் குறுக்கே கடந்து சென்றது. சில அடி தூரம் நடந்து சென்ற அந்த முதலை திடீரென நடுச்சாலையில் படுத்துக் கொண்டது. இதனாலும், முதலையைப் படம் பிடிக்க சிலர் முயன்றதாலும் ஜூனாச்சோ பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.